கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கலந்து கொண்டு கட்டிடத்தை ரிப்பன் பெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கம் தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ இளங்கோ, கரூர் ஜவுளி பூங்கா சேர்மன் நாச்சிமுத்து மற்றும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர் சங்கம் தலைவர் கோபால கிருஷ்ணன் மற்றும் செயலாளர் பால்ராஜ், பொருளாளர் சுந்தரராஜன் மற்றும் உப தலைவர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர் சங்கம் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்…. இது ஒரு சிறப்பான நிகழ்வாகும், தமிழக முதல்வர் ஜவுளி துறைக்கு என்று பல்வேறு திட்டங்களை ஒதுக்கி உள்ளார், 200 ஏக்கர் சி ப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளார், அமைப்பதற்கான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது, மின்சாரம் துறைக்கு அதிக அளவில் கடன் இருந்த போதிலும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான நிதிகளை அரசு மானியமாக வழங்கி அதை நிறைவேற்றி தந்தவர் முதல்வர். தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது, உண்ணியூர் பகுதியில் இணைக்கக்கூடிய காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை. அதற்கு பயண நேரத்தை குறைப்பதற்கான நீண்ட காலம் அதற்கு அறிவிக்கப்பட்ட 2013 ஆண்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஆண்டு 2014 அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆண்டு 2022. நிதியை ஒதுக்கியவர் தமிழக முதல்வர். இதுவரை என்னை பொருத்தவரை நம்முடைய மாவட்ட த்திற்கு அரசினுடைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து அதற்கான பணிகள் இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கின்றன. சிறப்பு வாய்ந்த கட்டிடத்தை உருவாக்கி இருக்கின்ற தலைவர், செயலாளர், பெருமக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்,