தமிழக அமைச்சரவை 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றது. 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை கடந்த 18 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 29ம் தேதி ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கரனுக்கு மாற்றப்பட்டது. சிவசங்கரனிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. அதனை தவிர வேறு ஏதும் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் தற்போது அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்வதோடு, மேலும் வலுப்படுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தொிகிறது. முக்கிய அமைச்சர்கள் சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.