Skip to content
Home » விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

விழுப்புரம் மின் சீரமைப்பு பணிகள்.. இரவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்மழை காரணமாக எந்த பகுதியிலும் மின் வினியோகம் பாதிக்கப்படக்கூடாது ஒரு வேளை பாதிக்கப்பட்டால் அந்தபகுதிகளில் உடனடியாக மின் பாதிப்பை சீர் செய்யும் பணிகளை கவனிக்குமாறு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று மாலை துவங்கி விழுப்புரம், செங்கல்பட்டு  , திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளில் மின் வினியோகம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின்பாதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியான சீரமைப்பு பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை விழுப்புரம் மாவட்ட மின் அலுவலகத்தில் மின்பாதிப்பு பகுதிகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனார் நந்தகுமார், எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இரவு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கடப்பாக்கம் பகுதியில், கனமழை மற்றும் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *