அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28ம்தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் உடல் நிலை குறித்த லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ அறிக்கை தயார் செய்யப்பட்டு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்.. ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை, வயிற்று வலிக்கான சோதனை, கழுத்து வலி, முதுகெலும்பு, எம்ஆர்ஐ, எம்ஆர்ஏ, எம்ஆர்சிபி சோதனை செய்யப்பட்டது. முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது. MRCP சோதனையில் பல பித்தப்பை பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பல்வேறு உடல் உபாதைகளால் செந்தில் பாலாஜி அவதிப்பட்டு வருகிறார். இது நாளடவைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும் அதனால் உடல் நிலை பாதிக்கப்படும். சிறைவாசத்தில் இருப்பதால் மனுதாரரின் உடல் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உரிய மருந்துகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் அவர் முறையாக எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, கணைய சுழற்சி, ரத்த கசிவு உள்ளிட்டவை ஏற்படும். செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிர்ச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நாளடைவில் கோமா நிலைக்கு செல்ல நேரிடும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் கால்சிய படிவு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொதிப்பு அதிகப்படுத்தி இதயம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என்ன..? மருத்துவ அறிக்கையில் அடுக்கடுக்கான “பகீர்” தகவல்கள்..
- by Authour
