அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி செந்தில் பாலாஜி, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு நேற்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தார். மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் என் ஆர் இளங்கோ கோரிவைத்தார். இதை கேட்ட நீதிபதி கவனிக்கிறேன். மனு பட்டியலிடப்பட்டவுடன் விசாரிக்கிறேன் என்றார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது…