கடந்த டிச 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் ல் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில் கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டோஷாப் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் என குறிப்பிட்டிருந்தாலும் அவர் பாஜ பிரமுகர்களை குறிப்பிட்டிருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்காக பயணிகளை மீண்டும் சோதனை செய்து விமானத்திற்குள் அனுமதிதத்தாகவும் கதவை திறந்த பிரமுகர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.. அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த டிவிட்டர் சுமார் 1லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் தாண்டி வைரலான நிலையில் விமானத்தின் கதவை திறந்தது யார்? மன்னிப்பு கடிதம் கொடுத்தது யார்? என தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜ நிர்வாகிகள் தான் அவர்கள் என பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் 2 ஆர்வக்கோறாளுக்கள் விமானத்தில் எமெர்ஜென்சி கதவை திறந்து விளையாடி பற்றி கடந்த டிச 29ம் தேதி கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த நிலையில் மத்திய சிவில் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA)விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது சேப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தார் சரி என பதிவிட்டுள்ளார். இந்த விசாரணையை உறுதிப்படுத்தும் வகையில் ஏஎன்ஐயின் டிவிட்டர் பதிவையும் அமைச்சர் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த டிவிட்டர் பதிவு மீண்டும் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் கடந்த டிச 10ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி வழியாக திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானத்தின்( 6E-7339) எமர்ஜென்சி கதவை திறந்தது தொடர்பாக மத்திய சிவில் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.. இந்த விமானத்தில் பாஜ தமிழகத்தலைவர் அண்ணாமலையும் பாஜ இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா இருவரும் திருச்சி வந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன…