Skip to content
Home » அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

அதிகரிக்கும் மின் தேவை.. புள்ளி விபரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்..

தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் படி, கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது 24×7 செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது…. மின்னகத்தில் 16,24,663 புகார்களில் 99.33% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது ,
“தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது.2020 – 21 இல் மின் நுகர்வு 16,481 மெகாவாட் .ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள் 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . மின்சாரத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை. சென்னையில் வரும் காலங்களில் எந்தவித தடையுமின்றி மின்விநோயோகம் செய்ய ஏற்பாடு. திறன் மேம்படுத்த புதிய கேபிள்கள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணெக்கெடுக்கப்பட்டு மின் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை. “சென்னையின் மின்தேவை அதிகமாக உயர்ந்துள்ளது, தற்போது 4,016 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.மின்தடை என்பது பராமரிப்புப் பணிகளுக்காக செய்யப்படுவது.தேவைக்கு அதிகமாக மின் விநியோகம் செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது;.  கடந்த 2 நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது; 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரிப்பு .மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது சீரான மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!