கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேசுகையில் தனக்கு சாப்பாடு ஒருவர் கொடுக்கிறார், வாடகை ஒருவர் கொடுக்கிறார், டீசல் ஒருவர் கொடுக்கிறார், கார் ஓட்டுநருக்கு சம்பளம் ஒருவர் கொடுக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம். நண்பர் ஒருவர் ஒரு நாள் உதவலாம், ஒரு வாரம் உதவலாம், ஒரு மாதம் உதவலாம். வருடக்கணக்கில் யாராவது உதவி செய்வார்களா? அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் என நிருபர்களை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி நான் தேர்தலில் போட்டியிட்டால், எனக்காக நண்பர்கள், உறவினர்கள் யார் செலவு செய்தாலும் அது என்னுடைய கணக்கில்தான் வரும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு என்னுடைய செலவுகளை எல்லாம் யாரோ செய்கிறார்கள் செய்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா? எனவும் கேள்வி கேட்டார்..
