அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..
- by Authour
