திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது..ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொத்து மதிப்பு 1023 கோடி என கூறியிருக்கிறார். அதை நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி அபராதம் தர வேண்டும் என தலைமை கழகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டரை லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம் (நூல்கள்) வாங்கி கொடுக்கிறேன். மக்களை திசை திருப்புவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் கூறுகிறார். வாயில் வந்ததை எல்லாம் சொன்னால் 100 பேரில் 10 பேராவது நம்ப மாட்டானா என்று அரசியல் செய்கிறார். முதல்வர் ஒன்றுதான் கூறினார் இது போன்று விமர்சனம் வதந்தி பரப்புபவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம். மக்களுக்காக பணியாற்றும் வேலையை அமைச்சர்கள் பார்க்க வேண்டும் இதுபோன்ற காமெடியனுக்கு எல்லாம் பதில் சொல்லும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார் இவ்வாறு அமைச்சர் மகேஷ் பேசினார். இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக்,முன்னாள் எம்எல்ஏ சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சொத்து 1023 கோடியை விற்று 38 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா 2.5 லட்சம் .. அமைச்சர் மகேஷ் தாராளம்..
- by Authour
