வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்தநாளையொட்டி திருச்சி வரகனேரியில் உள்ள அவரது வீட்டில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சிஆர்டிஓ வைத்தியநாதன், திருச்சி மாநகராட்சி மண்டலத் தலைவர் மதிவாணன், மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார், தாசில்தார் கலைவாணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
