தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சியில் நிருபர்களிடம் அளித்த பேட்டி..திருச்சி மாவட்டம், முக்கொம்பு ஆற்றின் நடுவே புதிதாக கட்டப்பட்ட பாலத்தை இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகளவு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை என நாங்கள் நிரூபிப்போம். திருச்சியை தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது, எனது தனிப்பட்ட ஆசை. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் அதிக ஊழல் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில் தற்போது தொடர்ந்து திமுக அமைச்சர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது என்ற கேள்வி க்கு அவர்கள் வேறு நாங்கள் வேறு என்று பதில் அளித்தார் அமைச்சர் துரைமுருகன். பேட்டியின் போது எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உடன் இருந்தார்.
தலைநகரமாகுமா திருச்சி?.. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி
- by Authour