கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கணக்கான பயணிகள் வந்து சென்று உள்ளனர். இந்த ரயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலங்களில் ரயில் வரும் நேரத்தில் மினி பேருந்துகளை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசு நகர பேருந்துகளும் இயக்கி வருவதால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பலமுறை மினி பேருந்து ஓட்டுனர்களை செயல்பாட்டை கண்டித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய ஆட்டோ ஓட்டுநர் இன்று காலை பேருந்தை முற்றுகையிட்டு ஆட்டோவை முன்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள்,தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. மினி பேருந்து உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி அனுமதியின்றி இயக்கப்படும் மினி பேருந்துகளை தடை செய்து ஆட்டோ ஓட்டுநர்களான எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.