Skip to content

மின் பயன்பாடு 18 ஆயிரம் மெ.வாட்டை தாண்டியது…

  • by Authour

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை, எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு கடந்த15-ம் தேதி 17,749 மெகாவாட் டாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டிய நிலையில், வரும் நாட்களில்வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். இதனால், தினசரி மின்தேவை19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் நாட்களில் அதிகரிக்கும் மின் தேவையைப்பூர்த்தி செய்ய, மின்வாரியம் அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!