கரூர் மாவட்டம், கடவூர் மலைப்பகுதியில் உரிமம் ரத்தாகிய போதிலும் அவ்வபோது இரவு நேரங்களில் வெள்ளை நிற கற்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை கடவூர் அருகே உள்ள ராசாபட்டியில் உள்ளஒரு குவாரியில் இருந்து வெள்ளை நிற கற்களை அனுமதியின்றி கடத்தி வந்த லாரியினை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து பாலவிடுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உரிய அனுமதி இன்றி வெள்ளை நிற கற்களை கடத்தி வந்த லாரியை போலீசார் வசம் ஒப்படைத்த போதிலும் அவர்கள் வழக்குபதிவு செய்யாமலும், அவர்களை தப்பிக்கவைக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் நீண்ட நேரம் காலதாமதம் செய்வதை உனர்ந்த பொதுமக்கள் அது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கரூர் மாவட்ட எஸ்பி பாலவிடுதி காவல்துறையினருக்கு, உரிய அனுமதி இன்றி கற்கள் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டதை அடுத்து பாலவிடுதி போலீசார் வெள்ளை நிற கற்களை கடத்தி வந்த லாரி டிரைவர் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சட்ட விரோதமாக உரிமம் காலாவதி ஆகி செயல்பட்டு வரும் குவாரிகளில் இருந்து கற்களை வெட்டி கடத்தி வரும் குவாரி உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.