சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப் பகுதி, பரந்து விரிந்த அடர்ந்த காடு. இது மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்கு பாதுகாப்பு படையினர் பல முறை தேடுதல் வேட்டைநடத்தி, 50 சதவீத பகுதியை அதாவது சுமார் 4000 சதுர கி.மீ பகுதியை மீட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த ஏகே 47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையினருக்கு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் இது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் மிகவும் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது.
சட்டீஸ்கரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். இத்துடன் சட்டீஸ்கரில் இந்தாண்டு நடைபெற்ற என்கவுன்ட்டரில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் 15 பேரும், பொதுமக்கள் 47 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.