Skip to content
Home » பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால்கேனில் தண்ணீர் கலப்படம்…போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த கடந்த 1997 இல் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டுறவு சங்கத்தில் 50 க்கு மேற்பட்ட நுகர்வோர்கள் காலை, மாலை இருவேளையும் பால் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் நுகர்வோர் வழங்கும் பால் கூட்டுறவு சங்க செயலாளரால் பரிசோதனை செய்யப்பட்டு 408 சரக்கு பால் வண்டியில். ஏற்றப்பட்டு வந்தது.
பால் ஏற்றிச் செல்லும் வேன் எரும நாயக்கன்பட்டி, பணிக்கம்பட்டி, மயிலாடும்பாறை, நடுப்பட்டி, உள் நடுப்பட்டி ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் சேகரிக்கப்பட்ட பால் வேனில் ஏற்றி திருமலை ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் பால் குளிரூட்டப்பட்டு வரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து பெரிய அளவில் லாரியில் சென்னையில் உள்ள ஆவின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மயிலாடும் பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து பால் கேன்களை ஏற்றி செல்லும் வேன் டிரைவர் பணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் சூர்யா என்பவர் பால் கேன் வேனில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள நடுப்பட்டி பால் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் செந்தூரமணி என்பவர் காலை, மாலை இருவேளையிலும் மயிலாடும் பாறையில் இருந்து கொண்டுவரப்படும் பாலில் தினசரி 20 லிட்டர் பால் எடுத்துக்கொண்டு அதற்கு ஈடாக தண்ணீரை நிரப்பி உள்ளார்.

இந்த முறைகேடு நடுப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பால் வண்டி டிரைவர் இருவரும் சேர்ந்து செய்துள்ளது பால் உற்பத்தி செய்யும் நுகர்வோர்கள் விசாரணையில் டிரைவர் சூர்யா கூறியுள்ளார்.

மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சேகரிக்கப்பட்ட பாலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்தது தெரியவந்தது. மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நுகர்வோர்கள் சங்க

செயலாளர் பால்வேனை சிறைபிடித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்த கரூர் மாவட்ட ஆவின் உதவி பொது மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட உதவி பொது மேலாளர் துரை அரசன் தலைமையில் விரிவாக்க அலுவலர் சேகர் கால்நடை மருத்துவர் முருகன் கரூர் மாவட்ட கரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் கணேசன் நேரில் வந்து வேன் டிரைவர் சூர்யாவுடன் விசாரணை மேற்கொண்டனர்.

வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ள பால் கெட்டுப் போகாமல் தடுக்க உடனே பால் குளிரட்டும் மையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் மூலம் சேகரிக்கப்பட்ட பால் கேன்கள் அனைத்தும் திருமலை ரெட்டியப்பட்டியில் உள்ள பால் குளிரூட்டும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த முறைகேடு சம்மதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொது மேலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!