Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என்று பால் உறுத்தியாளர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!