தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடானது. வெள்ப்பகுதியை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு திங்கள்கிழமை மாலை சென்னை வந்தது அவர்கள் 2 நாட்களாக வெள்ள பகுதிகளை பார்வையிட்டனர். இதற்கிடையில், புயல் பாதிப்புக்கான இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழு சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலைமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது. அப்போது தமிழ அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த மத்தியக்குழுவுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். தமிழக வெள்ள நிவாரண பணிக்காக தற்காலிக தேவையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நவாரண கோடியாக ரூ.12,659 கோடியும் வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். நிவாரண நிதியை விரைவாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.