மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையால் சென்னை – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது – நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு சேர்ப்பது தொடர்பான உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்
உதயநிதி பங்கேற்று ந்தந்தப் பகுதிகளில் மீட்பு & நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர் பெருமக்கள் – அதிகாரிகளிடம், தற்போதைய நிலவரத்தை காணொளி காட்சி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், நிவாரணங்களை முறையாக வழங்கவும் – தண்ணீர் வடிவதற்கான பணிகளை கூடுதல் எந்திரங்கள் மற்றும் பணியாட்களை வைத்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.