சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observer) கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடும் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் இதில் கலந்து கொண்டார்.
.அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் தொகுதி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி 110 நுண்பார்வையாளர்களுக்கு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவினை கண்காணிப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பரமணியன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட தகவலியல் மைய அலுவலர் ஜான் பிரிட்டோ, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.