தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.12.2023) சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மிக்ஜாம் புயல் கனமழையால்
பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-5, 59-வது வார்டு, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.என்.பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ்
முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 3500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், மண்டலக் குழுத்தலைவர் ஸ்ரீராமுலு, உள்ளாட்சி பிரதிநிதிகளைச் சேர்ந்த முரளி, ராஜசேகர், ஜெகதீஷ், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.