வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயலினால், சோழிங்கநல்லூர் மண்டலம், நூக்கம்பாளையம் லிங்க் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணி நடவடிக்கைகளையும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, தென் சென்னை
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மகேஷ்குமார், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.