அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைகள், உருவப்படங்களுக்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிள் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி விழாவை விமரிசையாக கொண்டாடினர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருவெறும்பூர் அண்ணா தொழிற்சங்கம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். அனைவரும் குமார் இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் S.S. ராவணன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் S.K.D.கார்த்திக் , அரியமங்கலம் பகுதி செயலாளர்தண்டபாணி ,பொன்மலை பகுதி கழக செயலாளர் .பாலசுப்ரமணியம் ,திருவெறும்பூர் பகுதி கழகச் செயலாளர் பாஸ்கர் (எ) கோபால் ராஜ்
கூத்தைபார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் S.P. கணேசன், மாவட்டத் கழக துணை செயலாளர் .சுபத்ராதேவி, சுப்ரமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ATP கார்த்திக் ,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் செயலாளர் KS பாஸ்கர் ,மாவட்ட கலைப்பிரிவுச் செயலாளர் MP.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார் ,திருவெறும்பூர் அவைத் தலைவர் முருகானந்தம் ,துவாக்குடி நகரக் கழக துணைச் செயலாளர் கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு பாலமூர்த்தி, மலைச்சாமி.A.P. கிருஷ்ணமூர்த்தி ,மீசை ஆறுமுகம், அண்ணாதுரை, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி கழக, நகர கழக ஒன்றிய கழக அணி நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழா நிறைவில் அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ப.குமார், மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.