திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு முழு உருவ வெண்கல சிலை திருச்சி திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப. குமாரின் முயற்சியால் இந்த சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்குகிறார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்கிறார்.
முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப்பொதுச்செயலாளர்கள் கே. பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.
விழாவுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், பரஞ்சோதி, ஓ.எஸ். மணியன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன், மாவட்ட செயலாளர்கள் அருண்மொழித்தேவன், குமரகுரு, இளங்கோவன், பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர், எஸ்.எம். பாலன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சீனிவாசன் மற்றும் திருச்சி மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற , நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், மாவட்ட வர்த்தகப்பிரிவு செயலாளர் சூரியூர் ராஜா, துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.