புதிய தோற்றத்தில் நடிகர் விஷால் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால். கடைசியாக அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் அடுத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் விஷால் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தனது நெஞ்சில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பச்சைக்குத்தி இருக்கும் போட்டோக்களை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் விஷால் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.