Skip to content

எம்.ஜி.ஆர் பிறந்த நாள்……107 கிலோ கேக் வெட்டினார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

அதிமுக நிறுவனர்  எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுகவினர் ஆங்காங்கே விழாக்கள் கொண்டாடி வருகிறார்கள்.  சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இன்று அதிமுக கொடிகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதைசெலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 107 கிலோ  எடையுள்ள பிரமாண்ட கேக்கை வெட்டி, முதல் துண்டை  அவைத்தலைவர்  தமிழ் மகன் உசேனுக்கு ஊட்டினார். அதைத்தொடர்ந்து  பொன்னையனுக்கும் கேக் ஊட்டினார்.   இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!