இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தைப் பொறுத்து நீர்திறப்பின் அளவு அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது