தமிழக, கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து செல்லும் சிலர், பாலாற்றை பரிசலில் கடந்து சென்று, கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 2 பரிசல்களில் சென்றவர்கள், கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி, மேட்டூர் பகுதி கிராமங்களுக்கு வந்து விட்டனர். ஆனால், மேட்டூர் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் (எ) ராஜாவை காணவில்லை. இதனால் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் பலியாகி இருக்கலாம் என கிராமமக்கள் பாலாற்றங்கரையில் தேடி ந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜா பாலாற்றில்சடலமாக மிதந்தார். கர்நாடக வனத்துறை சுட்டதில் அவர் பலியாகி உள்ளார். கர்நாடக வனத்துறையின் அட்டகாசம் குறித்து அந்த பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்து போன ராஜா மீனவர் ஆவார்.