கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அணையின் நீர்மட்டம் 71.777 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை அயைின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 17 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கே. ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 60, 116 கனஅடி திறக்கப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது நேற்று காலையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்தேக்க பகுதியான, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களாக பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.