மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையும் சேர்த்து கடந்த 2024ம் ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இன்று காலை 8 மணி வரை அணையின் நீர்மட்டம் 120அடியாக(93.470டிஎம்சி) பராமரிக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1,871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு1.305 கனஅடி திறக்கப்படுகிறது. மழை இல்லாவிட்டால் அடுத்த வாரத்தில் பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறக்கப்படும். அப்போது அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கும்.