மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 28இ,627 கனஅடியும், கொள்ளிடத்தில் 34,995 கனஅடியும் திறக்கப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 9,105 கனஅடியும், வெண்ணாற்றில் 9,107 கனஅடியும், கல்லணை கால்வாயில் 2,513 கனஅடியும்,ட கொள்ளிடத்தில் 6548 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கீழணையில் இருந்து கடலுக்கு வினாடிக்கு 74,148 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.