மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனவே மேட்டூர் அணை நேற்று இரவே நிரம்பும் என எதிர்பார்த்து நிலையில் மாலையில் நீர் வரத்து குறைந்தது. அத்துடன் அணையில் இருந்டது நேற்ற மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு நீர் வரத்து 62 ஆயிரத்து 870 கனஅடியாக குறைந்தது. அது 12 மணிக்கு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனவே இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.84அடி. அணையில் இருந்து வினாடிக்கு 23ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது. எனவே அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.,