Skip to content
Home » நீர் வரத்து அதிகரிப்பு……..மேட்டூர் அணை நிரம்புமா?

நீர் வரத்து அதிகரிப்பு……..மேட்டூர் அணை நிரம்புமா?

ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து 5,500 கனஅடியாக பதிவானது.  இன்று (டிச.3) காலை 6 மணி அளவீட்டின் போது நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது. தொடர்ந்து, காலை 8 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாகவும் 9 மணி அளவீட்டின்போது 23 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி  111 அடிக்க மேல் தண்ணீர் உள்ளது. இன்னும் 5 நாட்கள் இதே அளவு அணைக்கு நீர் வரத்து இருந்தால் அணை மொத்த கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *