மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி 120அடியை எட்டியது. பின்னர் படிப்படியாக குறைந்து 89 அடிக்கும் கீழே இறங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கர்நாடகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அத்துடன் டெல்டாவில் மழை பெய்வதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 29,850 கனஅடி தண்ணீர் வந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 7502 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டது.
இன்று காலை அணையின் நீர்மட்டம் 100.01அடியாக உயர்ந்தது. அணையில் 64.853 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
(23.10.2024)
Level (120.00) – 100.01
Inflow – 29850
Outflow – 7502
Capacity (93.470)- 64.853
Last year level – 48.36
Grand Anaicut Status
Cauvery (10691) – 104
Vennaru (9370) – 104
G.A.Canal (3380) – 100
Kollidam – 110