Skip to content
Home » மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  63.86 அடி. அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 879 கனஅடி . அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 14,004 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 27.646 டிஎம்சி.  கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 6,802 கனஅடியும், வெண்ணாற்றில் 1,102 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,412 கனஅடியும், கொள்ளிடத்தில் 1,003 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கடந்த வாரம் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இப்போது அங்கு மழையும் குறைந்து விட்டதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் நீர்வரத்து வினாடிக்கு 879 கனஅடியாக சரிந்து விட்டது.

Level – 63.86
Inflow – 879
Outflow – 14004
Capacity – 27.646
Cauvery – 6802
Venaru – 1102
G.A.Canal – 1412
Kollidam – 1003
Last year level – 120.10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!