தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை. இதன் மொத்த உயரம் 120 அடி. அணையில் 93.47 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். அணைக்குஅதிகபட்சமாக வினாடிக்கு 4 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது. ஒரு கனஅடி தண்ணீர் வராத நாட்களும் உண்டு. இன்று அணைக்கு வினாடிக்கு வெறும் 5 கனஅடி தண்ணீர் தான் வந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இவ்வளவு குறைந்த அளவு தண்ணீர் வந்துள்ளது.
அணையின் இன்றைய நீர்மட்டம் 59.26 அடி. அணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 24.13 டிஎம்சி.