கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று மத்திய இனை அமைச்சர் எல் முருகன் பின்னர் மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்ற காரமடை பகுதியை சேர்ந்த மாணவி ஸ்ரீநிதி மத்திய இனை அமைச்சர் எல்
முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் எல் முருகன் மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். தொடர்ந்து மாணவியை அவர் பாட சொன்ன நிலையில் அமைச்சர் முண்ணிலையில் மாணவி ஸ்ரீநிதி பாடல்களைப் பாடி வாழ்த்து பெற்றார்.