2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ் வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில் கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு கனகராஜை வெட்டி கொலை செய்தார். அதனை தடுக்க வந்த வர்ஷினி பிரியாவிற்கும் அரிவாள் விட்டு விழுந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வினோத் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கந்தவேல் சின்னராஜ் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 23ம் தேதி அன்று வினோத் தவிர இதர 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றவாளி வினோத்திற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…
- by Authour
