டிவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், உலகம் முழுவதும் டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் பணிநீக்கம் செய்துள்ளார். இவரை பின்பற்றியுள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும், பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், வருமானம் குறைந்து வருவதைக் காரணம் காட்டியும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், இரண்டாவது முறையாக 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் செய்ய போவதாக மெட்டா நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.