Skip to content
Home » 3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

3 வருடத்தில் கோவையில் மெட்ரோ ரயில்..

  • by Authour

தமிழ்நாட்டில் தற்போது  சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில்சேவை  உள்ளது. அடுத்ததாக  கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  சென்னை மெட்ரோ ரயில்  நிறுவன  மேலாண் இயக்குனர்  எம்.எ. சித்திக்,  கோவையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்குவது குறித்து  இன்று கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர்  சித்திக் நிருபர்களிடம  கூறியதாவது:

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,740 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு   ரூ.11,340 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.   கோவையில்  34.8 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். கூடுதல் விபரங்கள் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளோம்; ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கோவையில் சத்தியமங்கலம் ரோடு, அவினாசி ரோடு ஆகிய பாதைகளில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். அவினாசி ரோட்டில் தான் டெப்போ அமையும்.  சென்னையில் இப்போது  ெமட்ரோ ரயிலில்  4 கோச்கள்  இணைக்கப்பட்டு உள்ளது. புதிதாக வரும் மெட்ரோ ரயில்களில் 6 கோச்கள் இணைக்கலாம்.

கோவையில் 3 கோச்கள் மட்டும் இணைக்கப்படும். அதில் 700 பேர் பயணிக்கலாம்.  நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் ஜனவரி, பிப்ரவரியில் தொடங்கி விடும்.  இந்த பணிகளுக்கான ஒப்புதல் கிடைத்த 3 வருடம் அல்லது மூன்றரை வருடத்தில்    பணிகள் முடிக்கப்பட்டு விடும். நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிக்கே  2 ஆண்டுகள் ஆகிவிடும்.

மெட்ரோ ரயில் திட்டம் என்பது 10 ஆண்டுகள், 20 ஆண்டுகளை நினைத்து திட்டமிடுவது இல்லை. 100, 150 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு கட்டமைப்பை ஏற்படுத்துகிறோம்.

மதுரையில் ஒத்தக்டை முதல் திருமங்கலம் வரை  மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.