தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம் புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது. மாவட்டத் தலைவர் ப. அருள்ஜோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். அவர் பேசும்போது, பென்சனர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளும், அதை தீர்க்கும் முறைகளும் என்பதை விளக்கினார்.
மாவட்ட செயலாளர் க. மாரிமுத்து வரவேற்றார். துணைத்தலைவர்கள் ஆர்தர் காட்வின், மணி, அஜீராபீவி, விக்டர் ஜோசப்ராஜ், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், செ. திருஞானம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, வட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், பழனியாண்டி, தாமரைக்கண்ணன், கலியன்,குஞ்சிதபாதம், தாமஸ், விக்டர் ஜோசப் ராஜ் , ஸ்டீபன் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இளைச்செயலாளர் நன்மாறன் தீர்மானங்களை வாசித்தார். தீர்மானங்கள் வருமாறு:
ஓய்வூதியர் பெறும் கமுட்டேசன் பிடித்தம் 12 ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
65, 70, 75 வயதானவர்களுக்கு முறையே 5%, 10%, 15% பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சியில் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.