சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13ம் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர். டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் அதிகமாக பயணம் செய்து உள்ளனர்.
சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கி வருவதோடு, நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளிப்பதாக தெரிவித்து உள்ளது.