இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பலர் வருகைதர உள்ளதால், அவர்களுக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக 11 மணிவரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை, 19ந்தேதி மட்டும் இரவு 12 மணி வரை நீடிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.