தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து வருவதால் பல வியாபாரிகள் மின்கட்டணம் செலுத்தவில்லையாம்.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மின் கட்டணம் செலுத்தாத கடைகளின் மின் பீஸ் கேரியரை எடுத்துச் சென்று விட்டதாக வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் இருட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் இன்று காலை காமராஜர் மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பைப்பு தொகையாக ஒவ்வொரு வியாபாரிகளும் ரூபாய் இரண்டரை லட்சம் வரை கொடுத்துள்ளோம் ஆனால் வியாபாரம் என்பது மிகவும் குறைவாக நடக்கிறது காய்கறி மார்க்கெட் வரும் மக்கள் வாடகை அதிகம் என்பதால் காய்கறி விலையையும் நாங்கள் கூடுதலாக சொல்லி இருக்கிறோம் என்று அதிகம் வருவதில்லை இதனால் வியாபாரம் மிகவும் குறைவாக நடக்கிறது இந்நிலையில் இது போன்று பியூஸ் கேரியரை பிடுங்கி சென்றால் எப்படி வியாபாரம் செய்ய முடியும்.
எங்களின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து இது போல் செய்தால் அனைத்து வியாபாரிகளிலும் கடைகளை இழுத்துப் பூட்டும் நிலை தான் ஏற்படும். எனவே மீண்டும் மின் இணைப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.