Skip to content

தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பணிமனை கும்பகோணத்தில் நடந்தது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் பணிமனை நடந்ததில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் வேளாண் வணிகம் தாரா முன்னதாக வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் சுதா முன்னிலை வகித்து TNIAMP திட்டம் பற்றி எடுத்துக் கூறினார். புதிய வேளாண் தொழில் தொடங்குவதற்கு வணிகத் திட்டம் தயாரித்தல் பற்றி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஆர்.ஜெகன்மோகன் எடுத்துரைத்தார். நபார்டு மூலம் மானியம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் வங்கி கடன் பெறுவது பற்றி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனீஸ் குமார் எடுத்துரைத்தார். மாவட்டத் தொழில் மையத்தில் உள்ள திட்டங்கள் பற்றி உதவிப் பொறியாளர் சத்தியமூர்த்தி எடுத்துரைத்தார். வசீகரா வேதா நிறுவனர் விஜயா மகாதேவன் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். தொழில் முனைவர் காளிமுத்து கண்ணன் தன்னுடைய அனுபவத்தை விவசாயிகளிடையே பகிர்ந்துக் கொண்டார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் பற்றி கண்காணிப்பாளர் பிரியா மாலினி எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர்கள் ரவி, ராஜ்குமார், கவிதா, அனுசுபா செய்திருந்தனர்.

error: Content is protected !!