தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். மும்பை உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித். மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுடன் சுமித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்தார்.
தன்னுடைய சகோதரியின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததைப் சுமீத் பார்த்தார். உடனே `எப்படி ரத்தக்கறை வந்தது’ என்று சுமித் தன் சகோதரியிடம் கேட்டார். ஆனால், அவரின் சகோதரியால் சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை. தன் சகோதரி யாருடனோ பாலியல் உறவு வைத்துக்கொண்டதால் தான் ரத்தக்கறை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம்கொண்டார். இதனால், கோபத்தில் சுமித் தன் சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பிறகு உதைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்திருக்கிறார்.
இதில் சிறுமி படுகாயமடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தச் சிறுமி இறந்துபோனார். இது குறித்து போலீசாருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் கொடுத்தனர். போலீசார் சுமித்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆடையில் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறுமி அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. இது குறித்து சுமித் தன் சகோதரியிடம் கேட்டதற்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதனால் அந்தச் சிறுமிக்கு யாருடனோ தொடர்பிருப்பதாகவும், அந்த நபருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கறை படிந்திருப்பதாகக் கருதி தன் சகோதரியை வாயைப் பொத்தி தீவைத்து காயப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து, சுமித் கைதுசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் சுமித்தின் மனைவிக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.