இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் 26ம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய 474 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
எனவே இந்தியா எப்படியும் டிரா செய்யும் என கருதிய நிலையில் இன்று கடைசி செசனில் இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 155 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளும் பறிபோய்விட்டது. இதனால் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய வீரா் கம்மின்ஸ் மேன் ஆப் த பிளேயர் ஆனார்.
ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்தார். பண்ட் 30 ரன்கள் எடுத்தார். கோலி 5, ரோகித் 9 என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற புள்ளிகணக்கில் முன்னணியில் உள்ளது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் வரும் 3ம் தேதி சிட்னியில் நடக்கிறது.