Skip to content
Home » பாக்சிங் டே கிரிக்கெட்: இந்திய பந்து வீச்சு ஆஸ்திரேலியா விளாசல்

பாக்சிங் டே கிரிக்கெட்: இந்திய பந்து வீச்சு ஆஸ்திரேலியா விளாசல்

  • by Authour

கிறிஸ்துமஸ்  பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் கிரிக்கெட் போட்டியை பாக்சிங் டே கிரிக்கெட் என்பார்கள்.  ஆஸ்திரேலியா,  தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த பாக்ஸ்சிங் டே  காலம்  காலமாக நடந்து வருகிறது.

வெள்ளைக்காரர்கள் கிறிஸ்துமஸ்க்கு மறுநாள் தங்கள்  வீட்டு பணியாளர்களுக்கு கிப்ட் பாக்ஸ் கொடுத்து விடுமுறையும் கொடுப்பார்கள். இதைத்தான் பாக்சிங் டே என்கிறார்கள்.

அந்த வகையில் இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் பாக்சிங் டே கிரிக்கெட் தொடங்கியது. இந்தியாவுடன் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா   முதலில் பேட்டிங்   செய்தது. அறிமுக வீரரான  சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கவாஜா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

அறிமுக வீரர்  கான்ஸ்டாஸ் இந்திய  பந்து வீச்சுகளை சிதறடித்தார். 65 பந்துகளில் 60 ரன் சேர்த்திருந்த நிலையில்  ஜடேஜா பந்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அதன் பிறகு தான் இந்திய வீரர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.  ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா  311 ரன்கள் சேர்த்தது. தற்போது கேப்டன்  கம்மின்ஸ்(8ரன்), ஸ்மித் (68 ரன்) களத்தில் உள்ளனர்.  லபுசேன் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இந்திய பந்து வீச்சாளர்கள்  பும்ரா 3, வாஷிங்டன்,  ஜடேஜா,  ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்  எடுத்தனர்.  நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் சம நிலையில் உள்ளது.   எனவே இந்த போட்டியும், அடுத்த போட்டியும் ,U அணிகளுக்கும்  மிக முக்கியமானது.