தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சி சார்பில் வள மீட்பு பூங்காவில் தூய்மை பொங்கல் விழா நடந்தது. இதில் மெலட்டூர் பேரூராட்சித் தலைவர் இலக்கியா, துணைத் தலைவர் பொன்னழகு, செயல் அலுவலர் குமரேசன், கவுன்சிலர்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று அய்யம் பேட்டை திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜமாத் தலைவர் முகமது நஜீப் , வேங்கடரமண பாகவத கமிட்டிச் செயலர் பேராசிரியர் ஜனார்த்தனன், புனித கபிரியேல் பள்ளி தலைமையாசிரியர் அருட் சகோதரி புஷ்ப லதா, அஞ்சுமன் நூலக நிறுவனர் ஜபருல்லாஹ், செளராஷ்ட்ரா சபா தலைவர் சௌந்தர் ராஜன் பங்கேற்றனர். முன்னதாக மகளிரணி நிர்வாகி சத்ய பிரியா வரவேற்றார். மதுரா நாட்டியாலயா மாணவிகளின் பாத நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
